வீறியெழல் புத்தாண்டு வாழ்த்துக்கள்
அது மக்கள் மனதில் குழப்பங்களும் அச்சமும் அபயமும் தோன்றும். நம் அன்றாட வாழ்க்கையிலும் எதிர்பாராத மாற்றங்களையும் அனுபவிக்கிறோம். உண்மையைப் பார்த்தால் இதெல்லாம் ஆண்டவன் செயல். நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆயினும் நாம் வாழ வேண்டும் மற்றவர்களையும் வாழவைக்க வேண்டும்.
இக்கடுஞ்சூழலைத் தவிர்க்க வேண்டுமானால் இறைவன் அருளாசி மிகவும் இன்றியமை. அன்பர்களே, எழில் மாறல் ஆண்டு தேய்ந்து, வீறியெழல் ஆண்டு (5122) உதிக்கிறது. அதோடு புதிய எண்ணம், நோக்கம் நம் மனதில் தோன்றும். போனது போகட்டும், வருவதைப் பார்க்க வேண்டும். இவ்வாண்டும் சிக்கலான ஆண்டாக இருந்தும், கடவுள் அருளால், பூகம்பம், சூறாவளி, கடல்கோள், புயல்காற்று, பஞ்சம், போன்ற சேதங்களைத் தாண்டி நம் வாழ்கையைச் செம்மை படுத்துக் கடவுள் திருவடியைத் தொழுவோம்.
புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்போம். உங்கள் அனைவருக்கும் வீறியெழல் புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறி, விடை பெறுகிறேன்.
இங்ஙனம்
PSTTU
தலைவர்
ஐயா சி.மு.வையாபுரி