PSTTU
Primary School Tamil Teachers Union

பரிசு அளிப்பு விழா 2019


கடந்த புதன்கிழமை 5ஆம் தேதி ஜுன் மாதத்தில் தொடக்கநிலைத் தமிழ் ஆசிரியர் கழகம் சார்பிலும் உலகத் தமிழ்க் கற்றல் கற்பித்தல் சங்கம் சார்பிலும் 'தமிழ் லீக்' என்னும் இடத்தில் ஒரு பரிசு அளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழா தொடக்கநிலைத் தமிழ் ஆசிரியர் கழகத்துக்கு ஓர் ஆண்டு விழாவாக இருக்கும். இது கடந்த ஆண்டின் PSAC தேர்வில், தமிழ் மொழியில் முதல் தரம் வாங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஒன்று தான். இந்த ஆண்டில் முதல் தர வாங்கிய நூற்று எண்பது மாணவர்கள் அந்த விழாவில் கூடியிருந்தனர்.

இந்தக் கட்டுரையை ஆங்கில மொழியைப் படிக்கவும் | Read this article in English

கடந்த புதன்கிழமை 5ஆம் தேதி ஜுன் மாதத்தில் தொடக்கநிலைத் தமிழ் ஆசிரியர் கழகம் சார்பிலும் உலகத் தமிழ்க் கற்றல் கற்பித்தல் சங்கம் சார்பிலும் 'தமிழ் லீக்' என்னும் இடத்தில் ஒரு பரிசு அளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழா தொடக்கநிலைத் தமிழ் ஆசிரியர் கழகத்துக்கு ஓர் ஆண்டு விழாவாக இருக்கும்.  இது கடந்த ஆண்டின் PSAC தேர்வில், தமிழ் மொழியில் முதல் தரம் வாங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஒன்று தான். இந்த ஆண்டில் முதல் தர வாங்கிய நூற்று எண்பது மாணவர்கள் அந்த விழாவில் கூடியிருந்தனர்.

அன்று பத்து மணிக்கு அளவில் 'தமில் லீக்' என்னும் இடத்தில் கல்வித் துறை அமைச்சர், மாண்புமிகு திருமதி லீலா தேவி டுக்கன்-லச்சுமன் அவர்களையும், தொழில்நுட்பத் துறை அமைச்சர் மாண்புமிகு திருவாளர் யோகிடா சுவாமிநாதன் அவர்களையும் சிறப்பு விருந்தினர்களாக இந்த விழா தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்குத் தொடக்கத்தில் சுமார் ஆயிரம் தமிழர்கள் மொரீசியசு நாட்டு வாழ்த்துப் பாடல் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்து ஒலியைக் கேட்டு மதிப்புடன் நின்று இருந்தார்கள். 

 

கலைநிகழ்ச்சிக்குப் பிறகு தொடக்கநிலைத் தமிழ் ஆசிரியர் கழகத் தலைவர் ஐயா இந்திரன் வையாபுரி அவர்கள் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தைப் பற்றி உரையாற்றினார். அதற்குப் பிறகு துணைப் பேராசியர் முனைவர் ஜீவேந்திரன் சீமான் அவர்கள் பேச்சுத் தமிழைப் பற்றி மிக ஆர்வத்தோடு உரையாற்றினார். தொழில்நுட்பத் துறை அமைச்சர், மாண்புமிகு திருவாளர் யோகிடா சுவாமிநாதன் அவர்களும் கல்வித் துறை அமைச்சர், மாண்புமிகு திருமதி லீலா தேவி டுக்கன்-லச்சுமன் அவர்களும் தங்கள் உரைகளை ஆற்றி வந்தார்கள்.

                        

தமிழ் மொழிக்கும் தொடக்கநிலைத் தமிழ் ஆசிரியர் கழகத்துக்கும் பெரும் பணியை ஆற்றிட தலைவர் ஐயா இந்திரன் வையாபுரி அவர்களுக்கும் பொருளாளர் திருமதி சிறுமை.அ.குலன் முருகாசா பிள்ளை அவர்களுக்கும் ஒரு பரிசு கோப்பை வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் முதல் முறையில் தொடக்கநிலைத் தமிழ் ஆசிரியர் கழகம் தமிழ் மொழி வளர்ச்சிக்காக உழைத்த ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர்கள் சிலருக்குப் பரிசுக்கோபை வழங்கப்பட்டது. திருவாளர் காத்தான் செல்லன், திருவாளர் கோய்ந்சாமி கோவிந்தன், திருவாட்டி இலட்சுமி அமாசெ, திருவாட்டி விஜயந்தி தேவி அப்பசாமி, திருவாட்டி சரோஜினி அறுமுகம், திருவாட்டி சரசுவதி காலிங்கி என்பவர்கள் பரிசு கிடைத்த ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர்கள். அதற்குப் பிறகு இந்தக் கழகத்துக்கு எப்போதும் பல வழிகளில் உதவிகள் செய்த திருவாளர் விசாகம் பிள்ளை அவர்களுக்கும் பரிசுக்கோபை வழங்கப்பட்டது. கடைசியில் போன ஆண்டின் HSC Laureates மாணவர்களுக்கும் SC மாணவர்களுக்கும் PSAC மாணவர்களுக்கும் பரிசுக்கோப்பையும் நூலும் வழங்கப்பட்டன.      

 

                

           

 

மொரீசியசு தமிழ்க் கோவில்கள் கூட்டிணைப்பு, உலகத் தமிழ்க் கற்றல் கற்பித்தல் சங்கம், தமில் லீக், திரு Nadess Goundan and Company, திரு Adee Ramsamy (Wire link), திரு Renganaden Vyapooree, திரு Ruben Ramasawmyமொரீசியசு தமிழ்ப் பண்பாட்டு மையம், திரு Kistnah and Sabrina KistnenDr. Vel DurmooTamils.mu, திரு Ruben Mootoosamy (Hotel and Restaurant Sailors), Murugan Foundation, Agi decors and catering services, திரு Pallany Narayanan and திருவாட்டி Devi Appalsamy என்ற ஆதரவாளர்களுக்குத், தொடக்கநிலைத் தமிழ் ஆசிரியர் கழகத்தைச் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவிட்டுக் கொள்கின்றோம்.

திரு S.M Vyapooree, திரு P.Cheenaramen, திருமதி S.A.Coolen Murugasa Pillai, திரு A.Mootoo, திருமதி M.Vyapooree, செல்வி P.Veerapen, திருமதி V.Veerapen, செல்வி P.Coolen Armoogum, செல்வி V.Poinasamy மற்றும் எல்லாத் தமிழ் ஆசிரியர்களுக்கும் நன்றியைத் தெரிவிட்டுக் கொள்கின்றோம்.   

 

மற்றப் படங்களைப் பார்க்க இங்கே அமுக்கிக்கொள்ளுங்கள் 

 

செயலாளர்

புலவன்